லாரன்ஸ் உள்ள வந்தார்! எல்லாம் கெட்டுச்சு! இளைஞர் போராட்டக்குழு அதிருப்தி!

இளைஞர்களும் மாணவர்களும் குழந்தைகளும் பொதுமக்களும் கொத்துக் கொத்தாக தாக்கப்பட்ட அந்த கொடூரமான நாள், மெரீனா புரட்சியின் வரலாற்றில் படிந்த அசிங்கமான கறை! அன்று இரவே புதிய தலைமுறை சேனல், இப்படி நடந்திருக்கக் கூடாதோ என்கிற நோக்கில் ஒரு விவாதத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதில் பேசிய போராட்டக்காரர்களில் ஒரு சிலர் கூறிய கருத்துதான் பெரிய அதிர்ச்சி.

“சார்… ஆரம்பத்தில் மாணவர்களும் இளைஞர்களும் மட்டும்தான் கூடினோம். மூன்றாவது நாள்தான் உள்ள வந்தார் லாரன்ஸ். அரசியல்வாதிகளோ சினிமாக்காரர்களோ வேண்டாம் என்று உறுதியாக இருந்தோம். ஆனால் லாரன்ஸ் எப்படியோ வந்து எங்கள் மனசை ஏற்றுக் கொள்ள வைத்துவிட்டார். அவர் வரும்போதே உடல் நலப் பிரச்சனையால் வந்த காரணத்தால் அவருக்கு மட்டும் சேர் போட்டோம். மற்ற எல்லாரும் தரையில்தான் அமர்ந்தோம். சேர் போட்ட ஒரு காரணத்தாலேயே அவர் தன்னை தலைவராக நினைத்துக்கொண்டார். முதல் நாளிலிருந்து போராடிய பலரும் தங்கள் கருத்தை சொல்ல மைக் பிடித்தால், அவர்களை விலக சொல்லிவிட்டு இவரே பேச ஆரம்பித்தார். கடைசி நாள் தன்னிச்சையாக அவரே பிரஸ்மீட் கொடுக்கிற அளவுக்கு போய்விட்டார். இது துரதிருஷ்டவசமானது” என்றார்கள்.

அதுமட்டுமல்ல… அவசர சட்டத்தில் கவர்னர் கையெழுத்திட்டவுடனே கலைந்துவிடலாம் என்றுதான் கூறினார்களாம் பேராட்டக்காரர்களில் பெரும்பாலானோர். வேண்டாம் என்று அவர்களை தடுத்ததே லாரன்ஸ்தான் என்று கூறினார்கள் அந்த விவாதத்தில் கலந்து கொண்டவர்கள்.

இறுதியாக உறுதியாக அவர்கள் சொன்னது இதுதான். “இந்த போராட்டத்தில் சினிமாக்காரர்கள் யாரையும் உள்ள விடாமலிருந்திருந்தால் மிக சரியாக இருந்திருக்கும். அவர்கள் வந்ததால்தான் எல்லாம் கெட்டுப் போனது”

இந்த ஒரு போராட்டம் சில படிப்பினையை கொடுத்திருக்கும். அடுத்த முறை சரி செய்து கொள்ளுங்கள் நண்பர்களே…

2 Comments

  1. Mani says:

    லாரன்ஸ், பாலாஜி, ஹிப் ஹாப் ஆதி இந்த மூணு பெரும் கண்ணியமா நடந்த போறதை கொச்சை படுத்திட்டானுங்க. தமிழ் மக்களே, இந்த மூணு சுயநலவாதிகளையும் இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் நமக்கு காட்டிகொடுத்திவிட்டது. சமுத்திரக்கனி, மன்சூர் அலி கான், கமல் ஹாசன், சூர்யா போன்ற நடிகர்கள் தங்கள் எல்லை உணர்ந்து செயல்பட்டார்கள். நன்றி. அதி, பாலாஜி, லாரன்ஸ் போராட்ட காலத்துக்கு சும்மா இருவது நிமிஷம் வந்து மக்களை தூண்டிவிட்டு போய்ட்டானுங்க. இப்ப நல்லவனுக மாதிரி போராட்டம் திசை திரும்புதாம் இவனுங்களுக்கு. நம் மாணவர்கள், பெண்களை இவனுங்க மூணு பெரும் இழிவு படுத்திட்டானுங்க. அதுவும் பாலாஜி, நம் மாணவர்களுக்கு போராட்ட களத்துல அரசியல்வாதிகள் தலைமை தங்கணுமாம். நம் மக்கள் போராட்டத்தை அரசியல்வாதிகளிடம் விற்க RJ Balaji யார்? துரோகிகல் மூணு பெரு படங்களை வரும் காலத்தில் மானமுள்ள தமிழர்கள் புறக்கணிப்பார்கள்.

  2. Ravi says:

    கடைசி வரைக்கும் களத்தில் இறங்கி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களோடு இணைந்து போராடாமல் அவர்களை உசுப்பேத்தி விட்டு தவறான பாதைக்கு அழைத்து சென்றவன் கமல்.
    சும்மா ட்விட்டர், வாட்சப் உசுப்பேத்தியது போதும் நிறுத்திக்கொள்

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
vishal tension
தடியடி நடத்தியது சரிதான் என்று சொன்னேனா? விஷால் கடும் எரிச்சல்!

Close