கொடிக்குப் பின்- தனுஷ் கேரியரில் ரஜினி தலையீடு?

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை, ரிலீஸ் ஆன நான்கு நாட்களுக்குள்ளேயே பார்த்து நாலு நல்ல வார்த்தைகள் சொல்லிவிட்டு கிளம்பிய சூப்பர் ஸ்டாருக்கு, தன் சொந்த மருமகன் படத்தை பார்க்க இவ்ளோ நாளாகிருச்சு. யெஸ்… தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தை சில தினங்களுக்கு முன்புதான் பார்த்தாராம் ரஜினி. “அப்படியே அசந்துட்டேன்னா பார்த்துக்கங்களேன்…” என்று சொல்கிற அளவுக்கு சந்தோஷப்பட்டுவிட்டார் அவர்.

மகளை கட்டிக் கொடுத்ததோடு குடும்பக் கடமையை முடித்துக் கொண்ட ரஜினி, தொழில் ரீதியாக தனுஷுக்கு அட்வைஸ் பண்ணியதே இல்லை. அவருக்கு தெரியாதா? ஓலைப்பாயை நறுக்கி ஒஸ்தி மெத்தையாக்குகிற அளவுக்கு மருமகன் திறமைசாலி என்பது? அதனால்தான் அவரது தொழில் சுதந்திரத்தில் ஒரு போதும் மூக்கை நுழைக்க விரும்பியதில்லை அவர். இந்தக் கொடி அவரையும் மீறி பேச வைத்துவிட்டதாம்.

படத்தை பார்த்த ஜோரோடு தனுஷை அழைத்த ரஜினி, “இது மாதிரி டைரக்டர்களோடதான் நீங்க தொடர்ந்து டிராவல் பண்ணணும். உடனே நீங்க அவருக்கு இன்னொரு படத்திற்கான அட்வான்சை கொடுக்கணும்” என்று கேட்டுக் கொள்ள, தலையே சொல்லியாச்சு. அப்புறமென்ன என்கிற சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லையாம் தனுஷுக்கு. அப்புறம்?

அப்புறமென்ன… திருவாளர் துரை.செந்தில் குமாரை அழைத்து உடனடியாக ஒரு வெயிட்டான தொகையை அட்வான்சாகவும் கொடுத்துவிட்டார் தனுஷ்.

1 Comment

  1. sandy says:

    அட்வான்ஸ் கொடுத்தது பழைய நோட்டா இல்ல புது நோட்டா…

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter