அனுஷ்காவின் தங்கச்சிக்கும் அட்லீக்கும் கல்யாணம்!

அட்லீக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. ஷங்கரின்  அசிஸ்டென்ட், ராஜா ராணி ஹிட் பட இயக்குனர் என்பதையெல்லாம் மீறி, விஜய்யின் அடுத்தப்பட டைரக்டர்கள் லிஸ்ட்டில் இருப்பவர். ஒரு படம் ஹிட்டானால் போதும். அடுத்த படத்திற்கான அட்வான்சுகளை மூட்டைகளில் அள்ளிக் கொண்டு போக ஆசைப்படும் இயக்குனர்களுக்கு மத்தியில், நிறுத்தி நிதானமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறார் அட்லீ.

ஆனால் காதல், நிறுத்தி நிதானமாக நடக்க விடுமா என்ன? இவருக்கும் சின்னத்திரை நடிகையான ப்ரியாவுக்கும் வெகு நாட்களாக பழக்கமாம். (மீடியா கண்ணுல எப்படிப்பா திரையை போட்டு தப்பிச்சீங்க?) இந்த ப்ரியாவும் விஜய் டிவி யின் வளர்ப்புதான். அட்லீயும் அதே டி.வி யின் செல்லப்பிள்ளைதான். பார்றா… சின்னத்திரையிலிருந்து அப்படியே பெரிய திரைக்கு தாவினாலும், முழு நீள ஹீரோயின்தான் என்பதிலெல்லாம் ப்ரியாவுக்கு நம்பிக்கை இல்லை போலும். லட்சணமான முகம் இருந்தும், சிங்கம் படத்தில் அனுஷ்காவுக்கு தங்கையாக நடித்ததோடு தன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

இவருக்கும் அட்லீக்கும்தான் இப்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. திடுதிப்பென்று கிளம்பிய இந்த செய்தியை நம்புவதா, வேண்டாமா? என்று நிருபர்கள் தவித்தது தனிக்கதை. எப்படியோ ஸ்டில்கள் கைக்கு வர… நாட்டுக்கு அறிவிச்சாச்சு! நல்லாருங்க ஜோடி!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
pattaya kilappanum pandiya
பட்டைய கிளப்பணும் பாண்டியா- விமர்சனம்

விஜய் என்ற சுறாவை மேய்த்துவிட்டு ஒரேயடியாக நெத்திலிக்கு இறங்கியிருக்கிற எஸ்.பி.ராஜ்குமாரின் படம்! ‘சுறா பெரிசா, நெத்திலி பெரிசா?’ என்றெல்லாம் கேள்வி கேட்டு கிர்ர்ர்ர்...ராக தேவையில்லை. நெத்தியடியாக இருக்கிறது...

Close