உடை மாற்றிய நடிகையை ரகசிய க்ளிக்! ஷுட்டிங் ஸ்பாட்டில் வாலிபருக்கு தர்ம அடி!

மைலாப்பூரில் இருக்கிறது அந்த ஷுட்டிங் ஹவுஸ். சில தினங்களுக்கு முன் அங்கு திடீர் கூச்சல்! ஒரு வாலிபரை கையும் கிளிக்குமாக பிடித்த படப்பிடிப்பு தொழிலாளர்கள் அவரை நையப்புடைத்ததுடன் செல்போனையும் பிடுங்கி போட்டு உடைத்தார்கள். அப்புறம்? வாலிபர் எச்சரிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அப்படியென்ன பிரச்சனை?

மாதத்தில் பல நாட்கள் தமிழில் பல்வேறு சேனல்களில் வரும் முன்னணி சீரியல்களின் படப்பிடிப்புகளும், எப்போதாவது சினிமா படப்பிடிப்புகளும் நடைபெறும் ஷுட்டிங் ஹவுஸ் அது. திருவள்ளூவர் சிலைக்கு சற்று தள்ளி அமைந்திருக்கும் அந்த ஷுட்டிங் ஹவுசில்தான் வள்ளுவரின் குறளுக்கு சற்றும் ஒப்பாத அந்த காரியம் நடந்திருக்கிறது. மூன்றெழுத்து சேனல் ஒன்றில் சீரியல் ஹீரோயின், ஹாயாக உடைமாற்றி வர கிளம்பினார். அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டவர், மெல்ல ஆடைகளை களைந்து அடுத்த ஆடைக்கு தாவுகிற நேரத்தில்தான் அந்த உள்ளுணர்வு, கவனம் கவனம்… என்றது. ஆடைமாற்றுவதை விட்டுவிட்டு உன்னிப்பாக கவனித்தவருக்குதான் பேரதிர்ச்சி. மறைவான இடத்தில் நின்று கொண்டு வாலிபர் ஒருவர் இவரை படம் பிடித்துக் கொண்டிருந்தார். அவ்வளவுதான்… இவர் பேய் கூச்சலிட, யூனிட்டே திரண்டு வந்து அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தது.

அவனை போலீசில் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று முதலில் முடிவெடுத்தவர்கள், தேவையில்லாமல் நடிகையின் பெயர் மீடியாவில் அடிபட வேண்டாமே என்பதால் அந்த எண்ணத்தை கைவிட்டார்களாம். இது ஒருபுறமிருக்க, இதே ஹவுசில்தான் ராதிகா, குஷ்பு நடித்த பல சீரியல்களின் படப்பிடிப்பு இதற்கு முன் பலமுறை நடந்திருக்கிறது. இந்த ஷுட்டிங் ஹவுஸ் பணியாளர்களின் உதவி இல்லாமல் ஒருவன் தைரியமாக அவ்வளவு தூரம் உள்ளே வந்து படம் எடுத்திருக்கவே முடியாது. மேற்படி நடிகைகள் இந்த விஷயத்தில் கொஞ்சம் அக்கறை காட்டினால் மீண்டும் அந்த வாலிபன் சிக்குவான். பல உண்மைகள் வெளியே வரும் என்கிறார்கள் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர்.

ஆக்ஷன் எடுப்பாங்களா, சிவனேன்னு விடுவாங்களா? அது அந்த கேடுகெட்ட வாலிபனின் அதிர்ஷ்டத்தை பொறுத்தது.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
peechangai
நல்லா யோசிக்கிறாய்ங்க இவிய்ங்க!

Close