சவுந்தர்யா கார் மோதல்! தப்பிய ஆட்டோ டிரைவர்! எல்லாத்துக்கும் காரணம் ‘ அதுதான் ’

விடியும் வரைக்கும் பார்ட்டி பண்ணுவது கோடம்பாக்கத்தில் சகஜம்! ஆனால் தனக்கென ஒரு டிரைவரை வைத்துக் கொள்ளாமல், தடுமாறியபடியே காரை வேகமாக ஓட்டி அடுத்தவன் குடும்பத்தில் ‘சாமி’யாடுகிற வழக்கத்தை இன்னும் கைவிடவில்லை இந்த பாழாய் போன சினிமாக்காரர்கள்.

கோடி கோடியாக சம்பாதித்தாலும், டிரைவருக்கு தருகிற சம்பளத்தில் கணக்கு பார்க்கும் சின்ன புத்திதான் இதற்கு காரணம்.

லேட்டஸ்ட் அதிர்ச்சி சவுந்தர்யாவின் கார், நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் மோதியதுதான். ‘பவர் பாண்டி’ படத்தின் ஷுட்டிங் நிறைவு நாளை மிக மிக சீரும் சிறப்புமாக கொண்டாடிவிட்டு அதிகாலையில் வீடு திரும்பிய சவுந்தர்யா ரஜினி, ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவை இடித்துவிட்டார். உள்ளே நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த டிரைவருக்கு லேசான காயம்.

சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடோடி வர… காருக்குள் சவுந்தர்யா. ரஜினி மகளாச்சே? அந்த அதிகாலை நேரத்தில் இவரை பார்த்த மக்கள், சற்றே அமைதிகாக்க… விஷயத்தை அறிந்து ஓடி வந்திருக்கிறார் தனுஷ். “போலீசுக்கு போக வேண்டாம். இழப்பீடு தருகிறேன்” என்று கூறிய பின் அங்கிருந்து வந்திருக்கிறார்கள் இருவரும்.

சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் கையில் பத்தாயிரத்தை கொடுத்துவிட்டு கிளம்பியிருக்கிறார் சவுந்தர்யா. “அது ஆட்டோ சரி பண்ணவே சரியாப்பூடும். அடிபட்ட எனக்கு?” என்று ஆதங்கப்பட ஆரம்பித்திருக்கிறார் அந்த ஆட்டோக்காரர்.

வீட்டுக்கு போங்க. தடபுடலா(?) வரவேற்பாங்க!

2 Comments

  1. Karthick says:

    This is fake news

  2. Rajesh says:

    If Dhanush gave that 10k to you, you would have changed the complete news :-)

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
bruce lee Stills 016
Bruce lee Movie New Stills Gallery

Close