ஐஸ்வர்யா செய்தது சரியா? ஆத்திரமூட்டிய விழா!

வழக்கம் போல தமிழ் ஊடகங்களை அலட்சியப்படுத்தி, வட இந்திய ஊடகங்களுக்கு தீனி போட்டிருக்கிறது ரஜினி பேமிலி. ஒரு நீங்காத நெருடல். ரஜினி பத்திரிகையாளர்களை சந்தித்து இருபது வருடங்களுக்கும் மேலாச்சு. அவரது மகள்களும் அப்பா வழியில்தான். ஆங்கில ஊடகங்களை தவிர, தமிழ் ஊடகங்களுக்கு அவர்கள் மதிப்பளித்ததில்லை. இந்த சூழ்நிலையில் ஐஸ்வர்யா ரஜினி எழுதிய ‘ஸ்டான்ட்டிங் ஆன் ஆப்பிள் பாக்ஸ்’ என்ற புத்தகத்தை மும்பையில் வைத்து வெளியிட்டிருக்கிறார் அவர்.

ரஜினி வளர்ந்தது, சம்பாதித்தது எல்லாமே இங்குதான். ஆனால் அவரைப்பற்றிய புத்தக வெளியீடு மட்டும் மும்பையிலா? என்று முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஒருவேளை இதன் தமிழாக்கத்தை தமிழ்நாட்டில் வைத்து வெளியிடுவார்களோ என்னவோ? இருந்தாலும், இந்தப்புத்தகம் சுவாரஸ்யமாக இருப்பதாக வட இந்திய ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

அதையே படமா எடுங்க. ஆனால் இந்தியில எடுத்து அங்கேயே போட்டு அசத்துங்க ஐஸ்! (ஒரு கோவந்தேன்)

1 Comment

  1. Unmai says:

    ஏன்டா எந்த செய்தியும் இல்லன்னு இதெல்லாம் ஒரு நியூஸா போடுவீங்களா, உங்களை கேப்டன் காரி துப்புனத்துல தப்பே இல்ல

Leave a Reply

Facebook

Follow Us on Twitter