இளையராஜாவுக்கு தேசிய விருது!

2015-ம் ஆண்டிற்கான 64வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. எல்லாரும் எதிர்பார்த்தபடியே சிறந்த படத்திற்கான விருதை வென்றுள்ளது பாகுபலி.

சிறந்த நடிகருக்கான விருதுக்கு அமிதாப் பச்சனும் சிறந்த நடிகைக்கான விருதுக்கு கங்கனா ரணாவத்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த இயக்குநருக்கான விருது, சஞ்சய் லீனா பன்சாலிக்குக் கிடைத்துள்ளது. Bajirao Mastani படத்துக்காக.

திரைப்படம் தயாரிக்க உகந்த மாநிலம் (Most friendly film State award) – குஜராத். இதில் சிறப்பு விருது கேரளா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களுக்குக் கிடைத்துள்ளன

அமிதாப் பச்சனுக்கு 4வது முறையாகவும், கங்கனா ரணாவத்துக்கு 3வது முறையாகவும் தேசிய திரைப்பட விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்

மொழிவாரியான படங்களில் சிறந்த தமிழ்ப்படமாக ‘விசாரணை’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி, ‘ஆடுகளம்’ முருகதாஸ் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். சிறையில் கைதிகள் படும் அவலத்தை இப்படம் வெளிச்சம் போட்டு காட்டியது. விமர்சர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இப்படம்.

பாலா இயக்கத்தில், சசிகுமார், வரலெட்சுமி நடிப்பில் வெளியான படம் ‘தாரை தப்பட்டை’. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். இளையராஜாவின் 1000 வது படம் இது. இப்படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter