வரலாறு காணாத வகையில் வாய் பிளக்க வைத்த சேட்டிலைட் பிசினஸ்! 2 பாயின்ட் 0 வை கொத்திய ஜீ தமிழ்!

“ஹ்ம்… இப்படிதாண்டா ஆரம்பிப்பீங்க. அப்புறம் படம் வந்து நாலு வாரம் கழிச்சு திங்கிற சோத்துல மண்ணள்ளி வச்சுட்டாருன்னு ராகவேந்திரா மண்டப வாசல்ல உண்டியல குலுக்குவீங்க… போங்கடாங்… நீங்களும் ஒங்க இன்பர்மேசனும்!” பொதுவாக ரஜினி படம் பற்றிய வியாபார வாய் பிளத்தலுக்கு தமிழ்நாடு கொடுக்கிற ரீயாக்ஷன் இனிமேல் இப்படிதான் இருக்கும்.

லிங்கா படத்திலிருந்தே ஆரம்பித்தது வினை. 100 கோடி கிளப்புல லிங்கா சேர்ந்திருச்சு என்று ஆரம்பிப்பதற்கு முன்பே சிங்காரவேலன் ஆரம்பித்து வைத்தார் அந்த புலம்பலை. அது அடுத்து வந்த கபாலியிலும் எதிரொலிக்க….. வாயடைத்துப் போகிற அளவுக்கு வசை பாடி ஓய்ந்தார்கள் ரஜினி ரசிகர்கள். “ஏம்ப்பா… இனி யாரும் 100 கோடி கிளப்புல தலைவர் படம் சேர்ந்திருச்சுன்னு நாற வாயை ஓப்பன் பண்ணாதீங்க” என்று பொங்குகிற அளவுக்கு நிலைமை விபரீதம்.

இப்போது என்னவாம்? கிட்டதட்ட அதே போலொரு இன்பர்மேசன்தான். ஆனால் நம்புகிற மாதிரியும் இருக்கு. நம்ப முடியாத மாதிரியும் இருக்கு. சம்பந்தப்பட்ட ஜீ டி,.வியே சொன்னாதான் உண்டு.

யெஸ்… ரஜினி, அக்ஷய் குமார், எமி நடித்து ஷங்கர் இயக்கியிருக்கும் 2 பாயின்ட் 0 படத்தின் சேட்டிலைட் ரைட்ஸ் 110 கோடிக்கு விலை போயிருக்கிறது. ஜி.டி.வி தான் படத்தை வாங்கியிருக்கிறது. யு ட்யூப் வருமானம் நீங்கலாக பதினைந்து வருஷ ஒப்பந்தத்திற்கு இவ்வளவு பெரிய ரேட்டாம்.

செய்தி நிஜம் என்றால், தமிழ்சினிமா வரலாற்றில் வாய் பிளக்க வைத்த வியாபாரம் இதுவாகதான் இருக்கும்!

3 Comments

  1. கார்த்திக் says:

    இந்திய சினிமாவின் ஒரே வசூல் சக்ரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான். அவர் பட வசூல் சாதனையை அவர் முறியடித்தால் தான் உண்டு.

  2. Zeus says:

    It is not two point o. It should be called two dot o.

  3. Deen says:

    தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லவும் தமிழ் சினிமாவை உலகறிய செய்யவும் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒருவர் தான்

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
vizhithiru
ஒரு படம்! ஆறு இசையமைப்பாளர்கள்!

Close