அழையா விருந்தாளிக்கு ஆறு கோடியா? 2பாயின்ட்0 படவிழா பாலிடிக்ஸ்!

எப்பவுமே பாலிவுட்டில் ‘பாக்சர்’ மனப்பான்மை கொண்ட ஹீரோக்கள்தான் அதிகம். நமக்குள் வெட்டு குத்து இருந்தாலும், வெளிமாநிலத்திலிருந்து ஒருவரும் இங்கு வந்து கடை விரிக்கக் கூடாது என்பதில் மிக மிக தெளிவாக இருப்பார்கள். தெலுங்கில் சிரஞ்சீவியும் சரி. தமிழில் கமல் ரஜினியும் சரி. இந்திக்கு போய் அங்குள்ளவர்களின் பாலிடிக்ஸ்சை சமாளிக்க முடியாமல் அப்படியே யெஸ் ஆகி திரும்பியவர்கள்தான்.

அதையெல்லாம் மீறி, இந்தியாவின் மிகச்சிறந்த இடத்திலிருக்கும் அமிதாப், சல்மான்கான், ஷாருக்கான் வரிசையில் ரஜினியும் இடம் பிடித்தது அவரது தனிப்பட்ட ஸ்டைல் அன்றி வேறொன்றுமில்லை. இப்பவும் ரஜினி இந்திக்குப் போனால், ரசிகர்களை சிவப்புக் கம்பளம் விரிக்க வைக்கிற வித்தை தெரியும் அவருக்கு. இந்தநிலையில்தான் மும்பையில் நடந்த 2பாயின்ட்0 படத்தின் முதல் லுக் விழா, சில பாலிடிக்ஸ்களை உணர்த்தி அனுப்பியிருக்கிறது ரஜினிக்கு.

விழா நடக்கும் அரங்கம் கடந்த ஒரு வாரமாகவே உருவாக்கப்பட்டு வருகிறதாம். அடிக்கடி அந்த வழியாக கிராஸ் ஆகி வந்த சல்மான்கான், மனதுக்குள் என்ன நினைத்தாரோ, அதை விழா நாளன்று காட்டிவிட்டார். எப்படி? அழையா விருந்தாளியாக வந்துதான்!

இப்படியொரு விழாவை மும்பையில் ஏற்பாடு செய்த லைக்கா நிறுவனம், சிறப்பு விருந்தினராக முதலில் சல்மானைதான் அழைத்ததாம். ஆறு கோடி ரூபாய் கேட்டாராம் அவர். என்ன காரணத்தாலோ திட்டம் கைவிடப்பட்டது. அதற்கப்புறம் இந்த விழாவுக்காகவே காத்திருந்தவர், அழையா விருந்தாளியாக உள்ளே வந்துவிட்டார். சரி இதுவும் நல்ல விஷயம்தானே? அதெப்படி நல்ல விஷயம் ஆகும்?

மும்பை மீடியாக்கள் மொத்தமும் விழா நாயகரான ரஜினியை விட்டுவிட்டு, சல்மான்கான் மீது போகஸ் ஆகிவிட்டன. “எனக்கு யாரும் அழைப்பு விடுக்கல. நானேதான் அழையா விருந்தாளியாக வந்திருக்கிறேன்” என்று அவர் சொல்ல, இன்னும் பரபரப்பானது மீடியா. திருப்பி திருப்பி சல்மானையே முன்னிறுத்தின. 2பாயின்ட்0 இரண்டாம் பட்சம் ஆனது. ஆக மொத்தம் வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவரது படத்தையும், அதன் விளம்பரத்தையும் தனி ஒரு ஆளாக நின்று தடுத்துவிட்டார் ‘பாக்சர்’ சல்மான்!

இது லைக்கா முகத்தில் விழுந்த குத்தா, அல்லது…? தமிழ்சினிமா பிரபலங்களின் மீது விழுந்த குத்தா? புரியலையே மக்கா!

 

1 Comment

  1. Unmai says:

    Entire Program is pre Planned Setup. MOkkai

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
central-board-if-certification
பணக்காரனுக்கு பணியாரம்! ஏழைன்னா இளக்காரம்! தலைமீது ஏறி ஆடும் தமிழக சென்சார்!

இன்று நேற்று அல்ல. மதியழகன் என்பவர் தமிழக தணிக்கை குழுவின் தலைவராக வந்த நாளிலிருந்தே குறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் முதலை தோலில் புரண்டு, முள்ளம்பன்றி...

Close