விடுதலைப் புலிகளின் வீடியோ காட்சிகளை கைத்தொலைபேசியில் வைத்திருந்த இளைஞன் கைது!

மட்டக்களப்பு, கல்குடாப் பொலிஸ் பிரிவில் தமிழீழ விடுதலை புலிகளின் வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பாசிக்குடா யானைக்கல் கடற்கரைப் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்படி இளைஞனை கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாரைக் கண்டு ஓடிய இளைஞனை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதுடன் கையடக்கத்தொலைபேசியையும் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் வீடியோக் காட்சிகளை இளைஞன் தனது கையடக்கத் தொலைபேசியில் வைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேத்தாளை விஷ்னு கோவில் வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.


மேற்படி இளைஞனிடம் கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
sisters
ஊதாக் கலரு ரிப்பன் வீட்டில்… ஒரு சாதாக் கலரு ரிப்பன்?!!!

ஊதா கலரு ரிப்பனுக்குதான் ஒரேயடியாக மவுசு இப்போது. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அதிகாரபூர்வமான அழகியாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீ திவ்யாவுக்கு திரும்பிய இடமெல்லாம் செல்வாக்கை தந்தது அந்த ஊதாக்...

Close