மருத்துவ விஞ்ஞானி பாண்டியராஜன் ?

மாங்காடு அம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக கணபதி தயாரிக்கும் படம் “ஆய்வுக்கூடம்”

புதுமுகம் கணபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

புதுமுகம் சத்யஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

படத்தின் மிக முக்கிய வேடமாக விஞ்ஞானி மார்ட்டின் லியோ என்ற ஆராய்ச்சியாளர் வேடமேற்கிறார் ஆர்.பாண்டியராஜன்.

மற்றும் ப்ரீத்தி,சொந்தர்,பிரபுராஜ்,ரியாஸ்,பவுனிஜெய்சன், நெல்லைசிவா,செம்புலி ஜெகன்,ராஜராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு    –     எஸ்.மோகன் (இவர் ஒளிப்பதிவாளர் வி.செல்வாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்)

அனந்தபுரத்து வீடு படத்திற்கு இசையமைத்த ரமேஷ்கிருஷ்ணா இசையமைக்கிறார்.

பாடல்கள்   –   டாக்டர்.கிருதயா, துரைமுருகன், சன்ராஜா.

ஸ்டன்ட்    –   சூப்பர்குட் ஜீவா

தயாரிப்பு மேற்பார்வை –  ஆத்தூர் ஆறுமுகம்

தயாரிப்பு    –  கணபதி

கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் அன்பரசன்.(இவர் திரைப்பட கல்லூரி மாணவர்)

படம் பற்றி இயக்குனர்….

மருத்துவ விஞ்ஞானியான  பாண்டியராஜன் திருட்டுத்தனமாக இரு மனிதர்களை பிடித்து அவர்களது மூளையை அவர்களுக்கு தெரியாமல் மாற்றி விடுகிறார்.

மூளை மாற்றப்பட்ட அவர்கள் இருவரும் எப்படி நடந்து கொள்கிறார்கள்..இது தெரிந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? மூளை மாற்று திட்டத்தால் விஞ்ஞானி பாண்டியராஜன்  என்ன ஆனார் என்பதே மீதிக்கதை.  மருத்துவ விஞ்ஞானி கதாப்பாத்திரத்திற்கு பாண்டியராஜன் கட்சிதமாக பொருந்தி போய்விட்டார்.

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள்  “ U “ சான்றிதழ் கொடுத்து பாராட்டி உள்ளனர்.  

முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக ஆய்வுக்கூடம் தயாராகிறது. 

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
mokkaraja
புல்லுக் கட்டுகளால் செட்டு- அசத்துகிறார் மொக்க ராசா

தேவகலா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக உல்லாஸ் கிளி கொல்லூர்  தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா" என்று பெயரிட்டுள்ளனர் இந்தப்...

Close