புல்லுக் கட்டுகளால் செட்டு- அசத்துகிறார் மொக்க ராசா

தேவகலா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக உல்லாஸ் கிளி கொல்லூர்  தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா” என்று பெயரிட்டுள்ளனர் இந்தப் படத்தில் சஞ்சீவ்  முரளி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.

காநாயகியாக ஸ்ரீரக்ஷா நடிக்கிறார். இன்று ஒரு நாயகியாக அஸ்வினி நடிக்கிறார். ஸ்ரீரக்ஷா சில மலையாளப் படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். முக்கியவேடத்தில் ரஞ்சித் நடிக்கிறார் வில்லனாக சாகர் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.  மற்றும் தலைவாசல் விஜய், வனிதா, பாலாசிங், நான்கடவுள் ராஜேந்திரன் மயில்சாமி விஜய்கணேஷ், நெல்லை சிவா, வெங்கட்ராவ், சிவசநாராயண மூர்த்தி, சிசர்மனோகர், இந்திரன், அம்பிகாமோகன்,எம்.ஆர்.கோபகுமார், நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு : அய்யப்பன்.N   /    இசை : சுமன்பிச்சு

பாடல்கள் : ஏகாதசி / கலைஸ்ரீனி

எடிட்டிங் : சாஜன்

நடனம் : சாந்தகுமார் / ஸ்டன்ட் –  ரன்ரவி

தயாரிப்பு நிர்வாகம் : ஸ்ரீகுமார்

வசனம் : பொன். பிரகாஷ்

கதை : வினோத்லால்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு   –  சுரேஷ்

தயாரிப்பு : உல்லாஸ் கிளி கொல்லூர்

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்  – சந்தோஷ் கோபால்

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்.

தமிழ்நாடு, கேரளா இந்த இரு மாநிலங்களின் பார்டரில் இருக்கும் இரு வில்லன்களுக்கு இடையே நடக்கும் மோதல்கள்தான் இந்த படத்தின் திரைக்கதை. ஒரு தாதாவிடம் நட்பு வைக்கும் நாயகனின் குடும்பம் மற்றும் நாயகன் சந்திக்கும் பிரச்னை தான் கதை.

இந்த  படத்திற்காக கலிங்கராஜ புரம் என்ற இடத்தில் இருபத்தைந்து லாரி புல்லுகட்டுகளை கொண்டு       60 அடி அகலம், 80 அடி நீளமும் கொண்ட பிரமாண்டமான அரண்மனை அமைக்கப்பட்டு அதில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.  “ அடிடா  மேள தாளம்   பொறந்தாச்சு நல்லகாலம் “ என்ற அந்த  பாடல் காட்சியில் நாயகன், நாயகி மற்றும் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட  நடனக் கலைஞர்கள் பங்குபெற சுமார் இருபது நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றது.     

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
priyanka
நீ அழகு… என்று ஹீரோயினிடம் வழிந்த இயக்குனர்? முதல் நாள் ஷுட்டிங்கிலேயே இப்படி!

உயிர், சிந்து சமவெளி போன்ற படங்களை இயக்கிய சாமிக்கு தமிழ்சினிமாவில் அவ்வளவு நல்ல பெயர் இல்லை. இதை அவரே ஒப்புக் கொள்வார் என்பதும் ஐயமில்லை. கங்காரு படத்தின்...

Close