திருட்டுக்கல்யாணத்துக்காக சிம்பு  – ஆன்ட்ரியா பாடிய பாட்டு

ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக C.வெங்கிடுபதி, S.பாலசுப்ரமணியம் K.A.சசிபிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் படம் “  திருட்டுக்கல்யாணம் “   கதாநாயகனாக ரங்காயாழி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக தேஜஸ்வீ அறிமுகமாகிறார். மற்றும் ஆடுகளம்நரேன், பசங்க செந்தி, தம்பிராமையா, தேவதர்ஷினி இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குனர் A.வெங்கடேஷ் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு    –         கார்த்திக் நல்லமுத்து ( இவர் ரத்னவேலுவின் உதவியாளர்)

இசை             –         வைத்தி

கலை             –         A . பழனிவேல் ( இவர் வைரபாலனின் உதவியாளர்)

எடிட்டிங்        –         சஷிகுமார் ( இவர் டான்மேக்ஸ் உதவியாளர்)

பாடல்கள்      –         சேலம் சிவா, ஷக்திவேலன்

ஸ்டன்ட்        –          ரவி ஸ்ரீசந்திரன்

நடனம்          –         நோபல், சங்கர், ராதிகா, நந்தா

தயாரிப்பு நிர்வாகம்   –   ஜெய்ராம்

தயாரிப்பு   –   ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ்

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார்   –  ஷக்திவேலன்     (இவர் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சசி போன்றவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்)

படம் பற்றி இயக்குனர் ஷக்திவேலனிடம் கேட்டோம்…..இந்த படத்தில் “  ஆச மேல ஆச “ என்ற பாடலை சிலம்பரசன் பாடி இருக்கிறார். இந்தப் பாடல் சூப்பர் ஹிட்  ஆகும்.அடுத்ததாக ஆண்ரியா பாடிய “ சொர்க்கத்த “  என்ற பாடலும் மிகப் பெரிய ஹிட் ஆகும். அதே போல    சன் டி.வி சூப்பர் சிங்கர் புகழ் ஆட்டம்பாம் ஐஸ்வர்யா பாடிய ”சின்ன சின்ன “ என்ற பாடலும் ஹிட் அடிக்கும். சுமார் பத்து வயதே ஆனா சின்னப் பெண் இவ்வளவு தெளிவாக பாடியதை பார்த்து அதிசயத்து  விட்டோம்.

கல்லூரியில் படிக்கும் ஒரு ஆணும் பெண்ணும் பெற்றோருக்குத் தெரியாமல் ஓடி போய் தாங்கள் எதிர்பார்த்த வாழ்க்கையை அனுபவிதார்களா இல்லையா என்பது கதை !   பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்பாடு  இடைவெளி தான் மிகப்பெரிய இன்னல்களுக்குக் காரணம் இதைத் தான் இதில் பதிவு செய்திருக்கிறோம் என்றார் இயக்குனர் ஷக்திவேலன்.   

 

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
mgr-sivaji
இதென்னடா வனிதாவுக்கு வந்த சோதனை?

‘படத்தை கஷ்டப்பட்டு எடுக்கறது தயாரிப்பாளர். நடுவுல வந்து தியேட்டர் போட்டுக் கொடுக்கிற சில பேரு, தயாரிப்பு நிறுவனத்தை விட பெரிசாக அவங்க கம்பெனி பெயரை போட்டுக்குறாங்க. முன்னெல்லாம்...

Close