அமேரா தஸ்தூர் ஆட்டம் பாட்டத்தை பார்த்து மெய் மறந்த சந்தானம்


    வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற

தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ்சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்  தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது தொடர்ந்து பிரபு தேவா நடிக்கும் “ எங்க மங் சங் “ படத்தையும் தயாரித்து வருகிறார்கள்.  தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும்  தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகியாக அமேரா தஸ்தூர் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், பாலாஜி பாஸ்கி, யோகிபாபு, மதுசூதனன் ராவ், மயில்சாமி, பஞ்சுசுப்பு, ராதாமணி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள்  நடிக்கிறார்கள்.                                                            

ஒளிப்பதிவு     –     கோபிநாத் / இசை    –    ஜிப்ரான் / கதை  – ஞானகிரி                                   

கலை –  வனராஜா / ஸ்டன்ட்      –        சில்வா /  எடிட்டிங்     –    ராமாராவ்                            

நடனம்  – அசோக்ராஜா /   தயாரிப்பு நிர்வாகம்  –  மகேஷ்                                    

தயாரிப்பு மேற்பார்வை  – பாலகோபி

மக்கள் தொடர்பு  –  மௌனம்ரவி 

தயாரிப்பு  –        கே.எஸ்சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்

திரைக்கதை, வசனம், இயக்கம்  –   கே.எஸ்.மணிகண்டன்.   

ஓடி ஓடி உழைக்கணும் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது.

சமீபத்தில் அமேரா தஸ்தூர் ஜாலியாக ஆடி பாடிய பாடல் காட்சி ஒன்று சென்னை செம்மொழிப் பூங்காவில் அசோக்ராஜா நடன அமைப்பில் படமாக்கப்பட்டது. அவர் ஜாலியாக ஆடிப்பாடும் அழகை சந்தானம் மெய்மறந்து ரசித்த காட்சியையும் படமாக்கினர். ஜாலியான ஒரு கதையை படமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார் கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றி பட இயக்குனர் கே.எஸ்.மணிகண்டன் .

 

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
RajinikanthFansMeet stills011
RajinikanthFansMeet stills

Close